பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வரை எங்களுக்கு தூக்கம் இல்லை... சூளுரைத்த உதயநிதி!


ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

பிரதமர் நரேந்திர மோடியை வீட்டிற்கு அனுப்பும் வரை எங்களுக்கு தூக்கம் இல்லை என தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இன்று தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆலந்தூர் நீதிமன்றம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ”10 வருடமாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இருந்தார். இனி அவர் பதவியில் இருக்கப் போவதில்லை. ஜூன் 4ம் தேதி அவரை வீட்டுக்கு அனுப்பும் வரை நாங்கள் தூங்கப் போவதில்லை. தமிழ்நாட்டில் திமுக மேற்கொண்டுள்ள திட்டங்கள் தொடர்பாக அடுக்கிக் கொண்டே செல்கிறோம். அதே போல் பத்தாண்டுகளாக இந்தியாவிற்கு என்ன செய்தார் என்பதை பிரதமரால் பட்டியலிட முடியுமா?” என்றார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

மேலும், ”தமிழ்நாட்டில் ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாது என பாஜகவிற்கு நன்றாக தெரியும். மாநில அரசின் உரிமைகளை அதிமுக மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டது. மக்களை சந்தித்து மக்களின் வாக்குகளை பெற்று தான் ஒருவர் முதலமைச்சராக வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி எப்படி ஆட்சிக்கு வந்தார் என்பது மக்களுக்கு தெரியும்.” என்றார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

தொடர்ந்து பேசி அவர், ”இந்தியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்த உடன் நீட் தேர்வில் இருந்து நிச்சயம் தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறப்படும். தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பிற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு ரூபாய் கூட இழப்பீடு வழங்கவில்லை. இதைக் கேட்டால் பணம் கொடுக்க நாங்கள் என்ன ஏடிஎம் மெஷினா? என்று அவர் கேள்வி எழுப்பினார். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் வரியாக செலுத்திய பணத்தை தான் திரும்ப கேட்பதாக தெரிவித்தோம்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

x