[X] Close

அது அவருடைய சொந்த கருத்து!- நழுவிய கடம்பூர் ராஜூ


kadambur-raju-on-sellur-raju-comment

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 Oct, 2018 13:51 pm
  • அ+ அ-

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, எதிர்காலத்தில் அதிமுகவிற்கு பெண் ஒருவர் தலைமை தாங்குவார் என செல்லூர் ராஜூ கூறியது அவரது சொந்தக் கருத்து என்று கூறினார்.

அண்மையில், மதுரையில் பெண்களுக்கான சைக்கிள் பேரணி பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும் போது, "வரும் காலத்தில் உங்களில் ஒருவர் அதிமுகவை தலைமை ஏற்று நடத்தக்கூடிய காலம் வரும்" எனப் பேசினார். இது அதிமுகவினர் மத்தியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து விளக்கமளித்த செல்லூர் ராஜூ, "வாக்குச்சாவடிக்கு 5 பேர் வீதம் பெண்கள் எடுக்கப்பட்டு, அவர்கள் இருசக்கர வாகனத்தில் வாக்காளர்களை சந்திக்கப் போகிறார்கள். தேர்தல் வரும் பொழுது இப்படி போட்டிப் போட்டு வேலை செய்யும் பெண்களுக்கும், ஒரு காலத்தில் வாய்ப்பு வரும் என்று சொன்னேன். இதில் என்ன தவறு?

மகளிர் நிர்வாகிகளை உற்சாகப்படுத்த வேண்டும். இந்த இயக்கத்தில் ஒரு பெரிய வாய்ப்பு இருக்கிறது. இன்னும் உழைக்கணும், இன்னும் நல்ல பணிபுரிய வேண்டும் என்ற வேகத்தை உருவாக்க வேண்டுமென்றே கூறினேன்" என்று விளக்கமளித்தார்.

இந்நிலையில் இது குறித்து திருப்பதில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த கடம்பூர் ராஜூ, "எதிர்காலத்தில் அதிமுகவில் பெண்கள் தலைமை தாங்குவார் எனக் கூறியது அவரது சொந்த கருத்து. எந்த சூழ்நிலையில் பேசினார் என்பதை அவரே கூறியிருக்கிறாரே" எனக் கூறிச் சென்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close