[X] Close

முழுநேர அரசியல்வாதியான்னு கேக்காதீங்க! - கமல்


kamal-speech

  • kamadenu
  • Posted: 15 Oct, 2018 13:33 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

இனியும் என்னை முழுநேர அரசியல்வாதியா என்று கேட்காதீர்கள். சினிமாவில் நடித்துக்கொண்டே எம்.எல்.ஏ.வாகவும் இருந்த எம்ஜிஆர், பகுதிநேர அரசியல்வாதியா என்ன என்று கேள்வி எழுப்பினார் கமல்.

 நாமக்கல், சேலம் முதலான ஊர்களில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் மக்களைத் தேடி பயணம் மேற்கொண்டார்.

அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

ஆட்சியை நினைத்து இனியும் வருந்தவேண்டாம். ஊழலை நினைத்து இனியும் புலம்பவேண்டாம். ஊழல் செய்தவர்களை ஒதுங்கச் சொல்லும் காலம் வந்துவிட்டது. அப்போது உங்கள் குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கட்டும்.

காசு கொடுத்து, இந்தக் கூட்டத்தை மாற்றிவிடலாம் என்று பார்க்கிறார்கள். அது நடக்காது. நடக்கவிடாதீர்கள். இது அன்பினால் சேர்ந்திருக்கும் கூட்டம், நம்பிக்கையால், எதிர்பார்ப்பால் சேர்ந்திருக்கும் கூட்டம்.

வறுமையைக் காரணமாக வைத்து வாங்கிவிடலாம் என்று நினைப்பார்கள். அந்த வறுமை வருவதற்கே அவசியமில்லை. வறுமையே தேவையில்லை. அதைக் காரணம் காட்டி வருபவர்களை நெருங்கவிடாதீர்கள்.

என்னை இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டாயா என்று கேட்கிறார்கள். என்னைப் பார்த்து பகுதி நேர அரசியல்வாதி என்கிறார்கள். முழுநேர அரசியல்வாதி இல்லை என்று சொல்லுகிறார்கள். எம்ஜிஆரின் எத்தனையோ படங்களைப் பார்த்தால், டைட்டிலில் எம்ஜிஆர் எம்.எல்.ஏ. என்று போடுவார்கள். நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்படியென்றால் எம்ஜிஆர் என்ன பகுதி நேர அரசியல்வாதியா? அவர் தன்னுடைய வாழ்வாதாரத்துக்காக சினிமாவில் வேலை செய்தார். அதற்காக அரசியலுக்கு வரவில்லை.

ஆனால் சம்பளமாக எட்டணா கொடுங்கள், ஒருரூபா கொடுங்கள் என்று சொன்னவர்களால்தான் கஜானா காலியானது என்பதை மறந்துவிடாதீர்கள். .

கிராமசபைக் கூட்டங்களில் மூன்று நான்குமணி நேரம் நாங்கள் உட்கார்ந்து பல விஷயங்களைப் பேசி, ஆராய்ந்து, அறிந்துவிட்டு வருகிறோம். ஆனால் அங்கே வரவேண்டியவர்கள் ரிசார்ட்டில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு கமல் பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close