ரூபாய் 11 கோடி வரி பாக்கியை செலுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்திய அளவில் எதிர்க்கட்சிகளுக்கு வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலம் மத்திய அரசு குடைச்சல் கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கிய வருமான வரித்துறை அந்த கணக்குகளில் இருந்த 135 கோடி ரூபாயை பறிமுதலும் செய்துள்ளது. அதையடுத்து அடுத்த கட்டமாக 1700 கோடி ரூபாய் அபராதம் மற்றும் வரியாக செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இது காங்கிரஸ் கட்சியை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில் பொருளாதார ரீதியாக காங்கிரஸை முடக்கும் நடவடிக்கை என அக்கட்சி விமர்சித்தது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பாஜக அரசு வரி தீவிரவாதத்தை நடத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில் இந்தியா கூட்டணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைமைக்கும் வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 11 கோடி ரூபாய் வரிபாக்கியை செலுத்துமாறு அந்த நோட்டீஸில் வருமான வரித்துறை குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் வருமானவரித்துறை மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மிகப்பெரிய அளவில் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!
அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!
பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!
கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!
திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு