[X] Close

நிர்மலா தேவி வெளியே வந்தால் பல உண்மைகள் வெளி வரும்: இ.கம்யூ. மாநிலச் செயலாளர் முத்தரசன் தகவல்


mutharasan-speech-about-nirmala-devi

  • kamadenu
  • Posted: 15 Oct, 2018 10:52 am
  • அ+ அ-

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தின் 19-வது மாநில மாநாடு வரும் டிசம்பர் மாதம் 19-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை வேலூரில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆலோசனை மற்றும் வரவேற்பு கூட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள அரசு ஊழியர்களின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சாமிக்கண்ணு, விவசாய சங்க மாவட்டச் செயலாளர் முல்லை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி மாநில செயலாளர் மூர்த்தி வரவேற்றார்.

கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறும்போது, " மீனவர்கள் கடந்த 3-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் அரசு பேச்சு வார்த்தை நடத்தாதது கண்டிக்கத்தக்கது. பாலாற்றில் மணல் கொள்ளை அதிகரித்து வரும் நிலையில், மேலும் பல புதிய மணல் குவாரிகளை அரசு அமைத்து வருவது கண்டனத்துக்குரியது.

\தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை அரசு உடனே தொடங்க வேண்டும். தமிழக அரசு அடக்குமுறையை மேற்கொண்டுள்ளது. ஜனநாயக வழியில் போராட்டங்களை நடத்தக்கூட இங்கு அனுமதி மறுக்கப்படுகிறது. உரிமைகள் பறிக்கப்படுவதால், வரும் 16-ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு இ.கம்யூ. கட்சி ஆதரவு அளிக்கும்.

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி 6 மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ளதால் அவரை விடுதலை செய்ய வேண்டும். அவர் வெளியே வந்தால் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் குறித்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளதால் தமிழக முதல்வர் பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும். விசாரணையில் தான் குற்றமற்றவர் என்பதை அவர் நிரூபிக்க வேண்டும்.பெண்கள் பாலியல் குற்றங்கள் குறித்து வெளிப்படையாக அறிவித்து வருகிறார்கள். பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரம் படைத்த விசாரணைக்குழுவை அமைத்து பாலியல் குற்றங்களில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய தேர்தல் ஆணையம் ஜனநாயக விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. வாக்காளர் பெயர் நீக்கம், வாக்குச்சாவடி மையங்களை மாற்றியமைப்பது போன்றவற்றில் பல முறைகேடுகள் நடந்து வருவது வருத்தமளிக்கிறது" என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close