எம்பிஏ, எம்சிஏ மற்றும் எம்ஜி, எம்டெக், எம்ஆர்க் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கான டான் செட் நுழைவுத் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கும், பொறியியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் போன்ற முதுநிலை படிப்புகளில் சேருவதற்கும் டான் செட் எனும் நுழைவுத் தேர்வை, ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்தாண்டுக்கான நுழைவுத் தேர்வு கடந்த மார்ச் 9 மற்றும் 10ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. எம்சிஏ, எம்பிஏ, எம்டெக், எம்ஆர்க் உள்ளிட்ட முதுநிலை பொறியியல், மேலாண்மை நுழைவுத்தேர்வை 36,139 பேர் எழுதினர்.
இந்த நிலையில், டான்செட் நுழைவுத் தேர்வு முடிவினை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tancet.annauniv.edu என்ற பக்கத்தில் டான்செட் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எம்பிஏ மற்றும் எம்சிஏ தேர்வர்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தங்கள் மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழை வரும் ஏப்ரல் 3ம் தேதி முதல் மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!
கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!