சென்னையில் குறிப்பிட்ட இடங்களில் ஆவின் பால் விநியோகம் தாமதமாக இருக்கும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’சென்னை முழுவதும் மக்கள் விரும்பி வாங்கும் ஆவின் பால் பெரம்பூர், அண்ணாநகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் பால் விநியோகம் ஒரு சில மணி நேரம் தாமதமாகும்.
ஆவின் நிர்வாகம் பல்வேறு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து இடங்களிலும் சீரான பால் விநியோகத்தை உறுதிசெய்ய திட்டமிட்டுள்ளது. இருப்பினும் இத்தகைய காலதாமதத்திற்கு வருந்துகிறோம். இந்த சூழலில் ஆவின் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆவின் பால் விநியோகம் அண்மைக்காலமாக தாமதமாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் கை குழந்தைகளை வைத்திருப்பவர்கள் இதனால் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆவின் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஆவின் பால் விநியோக தாமத்தை சீராக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!