ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 6,215 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் 1ம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்து வருகிறது. அவ்வப்போது கிராமிற்கு பத்து ரூபாய் அளவிற்கு தங்கத்தின் விலை குறைந்து வந்தாலும், உயரும் போது 50 முதல் 100 ரூபாய் வரையிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு நேற்று 6,200 ரூபாயாக இருந்தது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.49,600 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து, 6,215 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 120 ரூபாய் உயர்ந்து, 49 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமிற்கு 35 ரூபாய் அதிகரித்தால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 50,000 ரூபாயை கடந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
சில்லறை விற்பனையில் நேற்று 80 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளியின் விலை, இன்று 30 பைசாக்கள் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய் 20 பைசாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார்வெள்ளி 300 ரூபாய் குறைந்து ரூ.80,200 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!