விஜயகாந்த் குடும்பத்தின் சொத்து மதிப்பு... 8 வருடங்களில் 4 மடங்கு உயர்வு!


விஜய பிரபாகரன்

விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது அவர் தாக்கல் செய்த வேட்புமனு மூலம் தெரியவந்துள்ளது.

பிரேமலதாவுடன் விஜய பிரபாகரன் மற்றும் சுதீஷ்

நேற்று பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதால், தமிழகத்தின் முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். நேற்று மட்டும் தமிழகத்தில் சுமார் 400-க்கும் மேற்படோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனு தாக்கல்

இதனிடையே முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவில் தெரிவித்திருக்கும் சொத்து விவரங்கள் இணையத்தில் வெளியாகி மக்களை ஆச்சரியப்பட வைத்துக்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், விருதுநகரில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனின் சொத்து மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது. அதில், விஜய பிரபாகரனுக்கு ரூ 11.38 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.6.57 கோடி மதிப்பில் அசையா சொத்துகளும் என மொத்தம் ரூ.17 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தாயார் பிரேமலதாவுக்கு ரூ.6.49 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.48 கோடி மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாக விஜய பிரபாகரனின் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட விஜயகாந்த், வேட்பு மனு தாக்கலின் போது, தனது சொத்து மதிப்பு ரூ.19.37 கோடி என குறிப்பிட்டி ருந்தார். இதன்படி பார்த்தால் கடந்த 8 ஆண்டுகளில் விஜயகாந்த் குடும்பத்தின் சொத்து மதிப்பு சுமார் 4 மடங்கு அதிகரித்திருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

x