[X] Close

பெட்ரோல், டீசலுக்கு லோன்!- தனியார் நிதி நிறுவனம் நூதனம்


loan-for-petrol-diesel

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Oct, 2018 16:42 pm
  • அ+ அ-

பெட்ரோலும் டீசலும் காலண்டர் தேதியைப் போல் தினமும் மாறிக் கொண்டே ஏறிக் கொண்டே இருக்கிறது.

அலுவலகத்துக்கு இனிமேல் சைக்கிளில் செல்வோம், குடும்பத்துடன் என்றால் மாட்டு வண்டியில் செல்வோம் என்ற மீம்ஸ்கள் எல்லாம் ஒரு புறம் குவிய இன்னொரு புறம் தனியார் நிதி நிறுவனம் ஒன்று நூதன யோசனையுடன் முன் வந்திருக்கிறது.

அதுதான் பெட்ரோல், டீசலுக்கு நிதியுதவி. கோவையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வாகனக் கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனம் ஒன்று பெட்ரோல், டீசலுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இதன்படி, வாகனப் போக்குவரத்து தொழில் செய்பவர்களுக்காக இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன் அறிமுக விழாவில் வாகனப் போக்குவரத்து தொழிலில் இருக்கும் பலரும் கலந்து கொண்டு திட்டத்தை வரவேற்றனர்.

எப்படிப் பெறுவது?

இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புவர்கள் முதலில் பெட்ரோல் பங்குகளில் தங்களது மொபைல் எண்ணை வழங்கிவிட வேண்டும். எரிபொருளை கடனுக்கு நிரப்பிக் கொள்ளலாம். பின்னர், தொகையை செலுத்தும்போது அதற்கு சிறு தொகை வட்டியாக வசூலிக்கப்படும்.

ஆரம்பகட்டமாக இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close