[X] Close

நாளைய தலைவர்களைத் தேடி வந்திருக்கிறேன்! - மாணவர்களிடம் கமல் பேச்சு


kamal-students

  • kamadenu
  • Posted: 12 Oct, 2018 15:10 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

என் கட்சிக்குத் தொண்டர்களைத் தேடி நான் வரவில்லை. நாளைய தலைவர்களைத் தேடி வந்திருக்கிறேன் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

நாமக்கல் அருகே பள்ளி ஒன்றில், சிவாஜிகணேசன் பெயரில் நூலகத்தைத் திறந்து வைத்தார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்.

அப்போது கமல் பேசியதாவது:

சிவாஜியின் மடியில் அமர்ந்து, எம்ஜிஆரின் தோளில் ஏறிவிளையாடி, கலைஞரிடம் பயிற்சி பெற்றவன் நான். இங்கே, மாணவர்கள் குழுமியிருக்கும் இந்த அவையில் அடக்கத்துடன் இருப்பேன். அந்த அவைக்கு அடங்கவும் மாட்டேன். பயப்படவும் மாட்டேன். அது நற்சபையாக இல்லாததால்தான், நான் அரசியலுக்கு வந்தேன்.

என்னடா இந்த கமல்ஹாசன், ஓட்டு கேட்க வந்திருக்கிறானா என்று மூத்தவர்கள் நினைக்கலாம். ஆனால் இளையவர்களுக்கு என்னைப் போலவே ஒரு கோபம் இருப்பதால், நீங்கள் என்னை அப்படி நினைக்கமாட்டீர்கள். நேற்றைய சரித்திரத்தைப் புரிந்துகொண்டு, இன்றைய யதார்த்தத்தையும் உணர்ந்துகொண்டு, நாளையைப் பற்றிய எதிர்பார்ப்புடன் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன்.

நான் அடிக்கடி சொல்லுவதையே இப்போதும் சொல்லுகிறேன். தொண்டர்களைத் தேடி நான் இங்கே வரவில்லை. நாளைய தலைவர்களைத் தேடி வந்திருக்கிறேன். என்னையும் என் கட்சியையும் தமிழகத்தையும் செதுக்குகிற கூர்மையான உளியாகத்தான் உங்களைப் பார்க்கிறேன். அதை மழுங்கச் செய்பவர்களையும் விடமாட்டேன். மழுங்கவும் விடமாட்டேன்.

என்னை பள்ளிக்குள் விடக்கூடாது என்று ஒரு ஜி.ஓ., எழுதப்படாத சட்டமாக போட்டிருக்கிறார்கள். என் அரசியல் யாத்திரை தொடங்கியதில் இருந்தே என்னை எந்தப் பள்ளிக்கும் விடவில்லை. பள்ளி என்பது நிரந்தரமாக தங்குமிடம் இல்லை. யாரும் அங்கேயே தங்கிவிடுவதும் இல்லை. எனவே அங்கே வாசலில் உங்களுக்காக, இளைஞர்களுக்காக, மாணவர்களுக்காக் காத்திருப்பேன்.

இவ்வாறு கமல் பேசினார்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close