[X] Close

கிராமங்களில் இருந்து அகில இந்திய தேர்வெழுத வரும் அனைவருக்கும் பேரிழப்பு! - சங்கர் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்


stalin-tweet-about-shankar-demise

  • kamadenu
  • Posted: 12 Oct, 2018 14:53 pm
  • அ+ அ-

கிராமங்களில் இருந்து அகில இந்திய தேர்வெழுத வரும் அனைவருக்கும் பேரிழப்பு என்று சங்கர் மறைவு குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் 

ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் குடும்பப் பிரச்சினை காரணமாக, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் மறைவை அறிந்து, அவரிடம் படித்த ஏராளமான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்த வந்தனர்.

அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், நக்கீரன் கோபால், நடிகர் சூரி முதலானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
சங்கர் மறைவு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஆயிரத்துக்கும் அதிகமான ஐ.ஏ.எஸ் - ஐ.பி.எஸ் அதிகாரிகளை உருவாக்கி சென்னையிலும் வெற்றிகரமாக ஐ.ஏ.எஸ் அகாடமியை நடத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய சங்கர் அவர்கள் மறைவெய்திய செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கிராமங்களில் இருந்து அகில இந்திய தேர்வெழுத வரும் அனைவருக்கும் பேரிழப்பு!

இவ்வாறு ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்
 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close