[X] Close

ஐஏஎஸ்தானே படிக்கணும்; 101 ரூபா கொடுங்க போதும்! - இயக்குநர் சற்குணம் கண்ணீர்


ias-acadamy-shankar-sargunam

ஐஏஎஸ் அகாடமி சங்கர் - இயக்குநர் சற்குணம்

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Oct, 2018 14:28 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்த, பணமில்லாத இளைஞர்களென்றால், சும்மா 101 ரூபா கொடுத்து ஐஏஎஸ் படிச்சாங்க. வரச்சொல்லுங்க ஜி என்று சொல்லுவார் சங்கர். அப்படியொரு மனிதரை, இளைஞர்கள் இழந்துநிற்கிறார்கள் என்று இயக்குநர் சற்குணம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் சங்கர் குடும்பப் பிரச்சினை காரணமாக, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் மறைவை அறிந்து, அவரிடம் படித்த ஏராளமான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்த வந்தனர்.

அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், நக்கீரன் கோபால், நடிகர் சூரி முதலானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இயக்குநர் சற்குணம் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

ஐஏஎஸ் அகாடமி சங்கர், எனக்கு நல்ல நண்பர். பல வருடங்களாக பழக்கம். பணத்துக்கு ஆசைப்படாமல், கிராமப்புற மாணவர்கள் பெரிய ஆளாக வரவேண்டும் என்கிற ஆசை கொண்டவர்.

சங்கரின் தந்தை இறந்தபோது, அவரிடம் ஈமச்சடங்கிறகுக் கூட பணமில்லை. அவர் தாத்தாவுடன் சேர்ந்து ஈமச்சடங்கு செய்ததையெல்லாம் சொல்லியிருக்கிறார்.

தென்னிந்திய அளவில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் துறைகளில் உள்ள பலரும், சங்கரிடம் படித்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஐஏஎஸ்லாம், படிக்கணும்னா டெல்லிக்குத்தான் போகணும் எனும் நிலையை மாற்றிக் காட்டியவர்.

ஐஏஎஸ் என்பது எட்டாக்கனி என்பதை உடைத்தவர். ஏழைகளுக்கும் இந்தப் பயிற்சி கிடைக்கக் காரணமாக இருந்தார். நானே அவரிடம் பேசி, இப்படியொரு ஏழைப் பையன், ரொம்ப ஆர்வமா இருக்கான். ஐஏஎஸ் பயிற்சி கொடுக்கணுமேன்னு ஏகப்பட்ட பசங்களுக்குக் கேட்டிருக்கேன். உடனே சங்கர், ‘அவ்ளோதானேஜீ. பணம் இல்லேன்னா என்ன. ஆர்வமா இருக்கான்ல. சும்மா 101 ரூபா மட்டும் கட்டிட்டு, சேரச்சொல்லுங்கஜீ’ என்று சொல்லுவார். எனக்குத் தெரிந்து ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு இலவசமாகவே பயிற்சி கொடுத்து, விழிப்புணர்வு கொடுத்த அந்த நல்லமனிதரை இழந்து நிற்கிறேன். சகாப்தமாக, ஆலமரமாக சங்கர் இளைஞர்களிடம் நிலைத்திருப்பார்.

இவ்வாறு இயக்குநர் சற்குணம் கண்ணீருடன் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close