[X] Close

முகமூடிகளுக்கு பின்னால் இருக்கும் முகங்கள் வெளிவரட்டும்!- மீ டூ-வுக்கு கனிமொழி ஆதரவு


let-s-encourage-the-women-to-expose-the-faces-behind-the-mask

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Oct, 2018 14:20 pm
  • அ+ அ-

மீ டூ இயக்கத்துக்கு ஆதரவாக திமுக எம்.பி. கனிமொழி கருத்து தெரிவித்திருக்கிறார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான மீ டூ (#MeTooIndia) இயக்கம் இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது.  அதுவும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், "மீ டூ பிரச்சாரம் இன்னும் பல விவாதங்களைக் காண வேண்டும். இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் தங்களை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உண்மை இந்த உலகுக்கு சொல்லப்பட வேண்டும். இது பாலியல் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சி. இதை நாம் ஆதரிப்போம். முகமூடிக்குப் பின் ஒளிந்திருக்கும் முகங்களை பெண்கள் அடையாளம் காட்டட்டும். பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

கடந்த வருடம் ஹாலிவுட்டில், ஹார்வி வின்ஸ்டீன் என்ற தயாரிப்பாளர், பல வருடங்களாக நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது, அலீஸா மிலானோ என்ற நடிகை, ட்விட்டரில் #Metoo (நானும் தான்) என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு, தான் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். இதோடு, பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, தங்கள் அனுபவங்களைப் பகிர முன்வர வேண்டும் என்று கோரினார். தொடர்ந்து, ஹாலிவுட்டில் மீடூ, ஒரு இயக்கமாக மாறி, இதன் மூலம் பலரது குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான மீ டூ (#MeTooIndia) இயக்கம் இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது

இந்த நிலையில் கனிமொழியும் மீ டூ குறித்து தன் கருத்தைப் பதிவிட்டிருக்கிறார். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close