[X] Close

சங்கர் மறைவு என்னை நொறுக்கிவிட்டது!- டிஆர்பிராஜா வேதனை


totally-shattered-hearing-the-loss-of-shankar

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Oct, 2018 13:41 pm
  • அ+ அ-

சென்னை மயிலாப்பூரில் சங்கர் ஐஏஎஸ் அகடாமியின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான சங்கர் நேற்று இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "சங்கர் மறைவு செய்தியைக் கேட்டு நொறுங்கிவிட்டேன். அவர் அவ்வளவு நல்ல மனிதர். ஆயிரக்கணக்கான இளம் இதயங்களுக்கு தேவதையாக இருந்தவர். மன்னார்குடியைச் சேர்ந்த சில மாணவ, மாணவிகளுக்காக நான் சிபாரிசு செய்த போதெல்லாம் அன்புடன் அதை ஏற்று உதவி செய்வார். இவரைப் போன்ற நல்ல மனிதர்களை இழப்பது சமூகத்துக்கும் பேரிழப்பு. மேலும், எந்தத் துறையைச் சேர்ந்தவரையும் சோர்வு தாக்கும் என்பது உண்மை. உங்கள் வாழ்நாளில் நீங்கள் செய்த சேவைக்கு தலை வணங்குகிறேன் சங்கர்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

தற்கொலை எண்ணம் தோன்றினால் அதைத் தவிர்க்க ஸ்னேகா மையம்  044-24640050 தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். அல்லது அரசாங்கத்தின் 104 சேவையை தொடர்பு கொண்டு மனத் தெளிவு பெறலாம்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close