[X] Close

விஜய் ஓட்டு கேட்டு வீதிக்கு வந்தா, இங்கே பலருக்கும் பீதி கிளம்பும் – நாஞ்சில் சம்பத்


vijay-nanjilsampath

  • வி.ராம்ஜி
  • Posted: 11 Oct, 2018 20:32 pm
  • அ+ அ-

விஜய் ஓட்டுக் கேட்டு வீதிக்கு வந்தால், இங்கே பலருக்கும் பீதி கிளம்பும் என்பது உறுதி என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

நாஞ்சில் சம்பத், தனியார் யுடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

கமல் கட்சியை நடத்திவிட்டு, திணறிக்கொண்டிருக்கிறார். ரஜினி கட்சியை ஆரம்பிப்பதற்கே யோசித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், விஜய் அரசியல் குறித்து பேசிய பேச்சுகள், அத்தனை தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தன.

முதல்வரானால் நான் நடிக்கமாட்டேன் என்பதை உறுதியுடனும் தெளிவுடனும் சொன்னவிதம், எல்லோரையும் யோசிக்கவைத்தது. ஒருவிரல் புரட்சி என்று அவர் வலியுறுத்தியது, இளைஞர்களிடையே ஒரு நம்பிக்கையையும் எழுச்சியையும் ஏற்படுத்தியிருப்பதாகவே உணருகிறேன்.

விஜய்யின் பேச்சைக் கேட்டால், அவருக்கு அரசியலுக்கு வரும் ஆசை இருப்பது போல்தான் தெரிகிறது. ஒருவேளை, விஜய் அரசியலுக்கு வந்து, வீதிக்கு வந்து ஓட்டுக்கேட்டால், இங்கே பலருக்கும் பீதி கிளம்பும்.

இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

 

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close