[X] Close

சசிகலாவும் தினகரனும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் கூட இல்லை! - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்


admk-member

அமைச்சர் ஜெயக்குமார்

  • வி.ராம்ஜி
  • Posted: 11 Oct, 2018 15:11 pm
  • அ+ அ-

சசிகலாவும் தினகரனும் அதிமுகவின் அடிப்பை உறுப்பினர்களாகக் கூட இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து, அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் பேசியதாவது:

எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இயக்கம் இது. பின்னர் ஜெயலலிதாவால் இன்னும் வளர்க்கப்பட்டு, வேரூன்றப்பட்ட இயக்கமாகத் திகழ்கிறது. ஜெயலலிதாவால், பொலிவோடும் வலிவோடும் நிற்கிறது அதிமுக.

அதிமுகவின் ‘பை லா’ பிரகாரம், கட்சியில் இருந்து ஒருவர் தாமாகவே விலகினாலோ, அல்லது விலக்கப்பட்டாலோ அவர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியானது காலாவதியாகிறது என்பதுதான் கட்சியின் விதி.

இப்போது சசிகலாவின் தலையீடு எதுவும் இல்லை. மேலும் சசிகலா, அமமுகவின் பொதுச்செயலாளராக இருக்கிறார். எனவே அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியை சசிகலா இழந்துவிட்டார். அதேபோல் தினகரனும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார். சசிகலா, தினகரன் மட்டுமின்றி சசிகலா சம்பந்தப்பட்டவர்கள் எல்லோருமே அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இப்போது இல்லை.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close