[X] Close

ரஜினி கட்சிக்கு 47,000 பூத் கமிட்டி ரெடி: விரைவில், கட்சிப்பெயரை அறிவிப்பாரா ரஜினி?


rajini-boothcommitty

நடிகர் ரஜினிகாந்த்

  • kamadenu
  • Posted: 11 Oct, 2018 12:31 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

ரஜினியின் கட்சிக்கு 47000 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 70 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இனிமேலாவது கட்சியின் பெயரையும் கொடியையும் ரஜினிகாந்த் அறிவிப்பாரா என்று ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் மன்ற நிர்வாகிகள்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரஜினி மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்துக்கு தமிழகம் முழுவதும் இருந்து, ரஜினி மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வந்திருக்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வாரியாக இதுவரை நடைபெற்ற பணிகள் என்னென்ன, இனி நடக்க உள்ள பணிகள் எவை என்பது குறித்தெல்லாம் பேசப்பட்டு வருகின்றன.

கடந்த வருடம் டிசம்பர் கடைசி வாரத்தில் ரஜினிகாந்த், தன் ரசிகர்களை மாவட்ட வாரியாக, மண்டல வாரியாக சந்தித்துப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் நடைபெற்ற அந்த சந்திப்பில், தினம் ஒரு கதைகளையும் சம்பவங்களையும் தனக்கே உரிய ஸ்டைலில் சொல்லிக்கொண்டிருந்தார் ரஜினி.

நிறைவு நாளில், அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்தார். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லாத இந்தச் சூழ்நிலையில், இதற்கு மேலும் வராவிட்டால், என் மனசாட்சியே என்னைக் குத்தும் என்றும் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தல் வருவதாக இருக்கிறது. அடுத்து, பாராளுமன்றத் தேர்தல் வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் நிற்கப்போவதில்லை. பாராளுமன்றத் தேர்தலின் போது, யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பேன். சட்டமன்றத் தேர்தல்தான் யுத்தம். எனவே போருக்குத் தயாராக இருங்கள் என்று ரஜினி பேசினார்.

இந்த நிலையில், ரஜினி எப்போது கட்சி ஆரம்பிப்பார், கட்சியின் பெயர் என்ன என்பது குறித்து எதுவும் வெளியாகவில்லை. விரைவில் ஆரம்பிப்பார், விரைவில் ஆரம்பிப்பார் என்று சொல்லப்பட்டு வந்தது.

இப்போது,, கிட்டத்தட்ட 70 சதவிகித அளவுக்கு, பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. சுமார் 47,000 பூத்கமிட்டிகள் அமைக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள பூத்கமிட்டி அமைக்கும் பணிகள், இறுதிக்கட்டத்தில் நடைபெற்றுவருகின்றன என்று  ரஜினி மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பூத் கமிட்டியும் அமைத்தாகிவிட்டது. அடுத்து இனியாவது சீக்கிரமே தன் கட்சியின் பெயரையும் கொடியையும் ரஜினிகாந்த் அறிவிப்பாரா. எப்போது அறிவிப்பார் என்று ஆர்வமும் ஏக்கமுமாக அவரின் மன்ற நிர்வாகிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close