[X] Close

புஷ்கர விழாவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு: படித்துறைகளில் 200 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலை


maha-pushkara

  • kamadenu
  • Posted: 11 Oct, 2018 12:06 pm
  • அ+ அ-

திருநெல்வேலி

தாமிரபரணி மகா புஷ்கர விழாவுக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் தீவிர ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்.

பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாது காப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. திருநெல்வேலி மாநகர் பகுதியில் 10 முக்கியமான படித்து றைகளில் வெளி மாவட்ட போலீ ஸார் மற்றும் மாநகர போலீஸார் 1,700 பேரும், பிற இடங்களில் 1,500 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 14 தீயணைப்பு நிலையங்களி லும் பணியாற்றும் நன்கு நீச்சல் தெரிந்த கமாண்டோ தீயணைப்பு வீரர்கள் 130 பேர் 18 படித்துறைகளுக்கு மீட்புப் பணிக்காக அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 70 கமாண்டோ வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

எட்டெழுத்து பெருமாள் கோயில், கருப்பந்துறை, திருப்புடைமருதூர், பாப நாசம் ஆகியபடித்துறைகளில் ரப்பர் படகுகளுடன் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி தெரிவித்தார்.

வாகனங்கள் நிறுத்துமிடம்

தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி நெல்லையில் வாகனங்களை நிறுத்த 6 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நெல்லை மாநகர போலீஸார் விடுத்துள்ள செய்திக்குறி ப்பில் கூறியிருப்பதாவது:

தாமிரபரணி மகா புஷ்கர விழாவுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் 11-ம் தேதி (இன்று) முதல் 23-ம் தேதி வரை தங்களது இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களை திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி மைதானம், சாப்டர் மேல்நிலைப் பள்ளி மைதானம், அரசு பொருட்காட்சித் திடல் ஆகியவற்றில் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்களை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானம், பெல் பள்ளி மைதானம், காந்தி நகர் இந்து மேல்நிலைப் பள்ளி மைதானம் ஆகியவற்றில் நிறுத்த வேண்டும். இந்த இடங்கள் தவிர பிற இடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது.

குறுக்குத்துறை சாலையிலும், மீனாட்சிபுரத்தில் இருந்து குறுக்குத்துறை செல்லும் சாலையிலும், அண்ணா சிலை அருகில் இருந்து கைலாசபுரம் செல்லும் சாலையிலும் நான்குசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

திருநெல்வேலி சந்திப்பு முதல் டவுன் மற்றும் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் செல்லும் வழி ஆகியவை ஒருவழிப் பாதையாக செயல்படுத்தப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close