[X] Close

ஜெயலலிதாவையே மிரட்டிய கூட்டம் அது! - அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு


udhayakumar

அமைச்சர் உதயகுமார்

  • kamadenu
  • Posted: 11 Oct, 2018 10:22 am
  • அ+ அ-

சசிகலா, தினகரன் முதலானோரைக் கொண்ட கூட்டம், ஜெயலலிதாவையே மிரட்டியது. அப்படியிருக்க, நாங்கள் எல்லோரும் எம்மாத்திரம் என்று கேள்வி எழுப்பி உள்ளார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

மதுரையில் ஆர்.பி.உதயகுமார் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

டிடிவி. தினகரன் இப்போது பலம் இழந்துவிட்டார். செல்வாக்கு இழந்துவிட்டார். ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இப்போது, ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கிறார்.

ஒரு சம்பவம் ஒன்று நடந்தால், அந்தச் சம்பவம் நடந்த உடனேயே தெரியப்படுத்தவேண்டும். மக்களுக்குச் சொல்லவேண்டும். அதைவிட்டுவிட்டு, இத்தனை வருடம் கழித்துச் சொல்லுகிறார் என்றால் தினகரன் வேறு ஏதோ நினைத்துச் செயல்படுகிறார் என்பது தெரிகிறது.

இப்படியான செயல்களை பிளாக்மெயில் என்று சொல்லுவார்கள். இப்படி தினமும் ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்லி பரபரப்பாக்கி, பிளாக்மெயில் செய்து மிரட்டுகிறார் தினகரன். அவ்வளவு ஏன்... இந்தக் கூட்டம், ஜெயலலிதாவையே மிரட்டிய கூட்டம். அப்படியிருக்க, நாங்கள் எல்லோரும் எம்மாத்திரம்?

இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close