மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றி திரிந்த வாலிபருக்கு சிகை அலங்காரம் செய்து புத்தாடை அணிவித்து அழகுப்படுத்திய தமிழக வெற்றி கழகத்தினரின் செயல் தஞ்சையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கி இருந்தார். இந்த கட்சியை சேர்ந்த தொண்டர்கள், விஜய் நற்பணி இயக்கம் என்ற அமைப்பு இருந்தபோதே பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தினர் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு உதவியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பனந்தாள் பகுதியில் கடந்த சில மாதங்களாக ஜடாமுடியுடன் இளைஞர் ஒருவர் ஆதரவற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்து வந்தார். அவருக்கு உதவ வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இன்று அந்த வாலிபரை அழைத்துs சென்று தலைமுடியை சுத்தம் செய்து, அவருக்கு ஷாம்பு போட்டு குளிக்க வைத்தனர். பின்னர் அவருக்கு லுங்கி மற்றும் புது சட்டை ஆகியவற்றை அணிவித்து அழகுப்படுத்தினர்.
இது போன்ற ஆதரவின்றி சுற்றித் திரிபர்களை கண்டறிந்து அவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால், அவர்களுக்கு சேவை செய்ய தயாராக இருப்பதாக அந்த இளைஞர்கள் அப்போது தெரிவித்தனர். மேலும் தற்போது மீட்கப்பட்டுள்ள நபரின் குடும்பத்தினரை கண்டறிந்து அவருடன் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இளைஞர்களின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வாடிக்கையாளர்களுக்கு இன்று தான் கடைசி நாள்... பஞ்சாப் வங்கி எச்சரிக்கை!
வாயில் தீ கொண்டு ஓவியர் வரைந்த' தல' படம்... வைரலாகும் மாஸ் வீடியோ!
சவுக்கு சங்கர் மீது சாட்டையைச் சொடுக்கிய உயர் நீதிமன்றம்... வீடியோ வருமானத்தை செலுத்த உத்தரவு!
பெங்களூருவில் மீண்டும் பரபரப்பு... பள்ளி அருகே ஏராளமான வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!
சிட்டிங் எம்பி-க்கள் 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு... பரபரக்கும் திமுக வேட்பாளர் பட்டியல்!