விஜய் வருகை பெரியார் அரசியலுக்கு வலு சேர்க்கும்: திருமாவளவன்


திருமாவளவன் | கோப்புப்படம்

அவிநாசி: விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளன் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகேயுள்ள பொங்குபாளையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

பஞ்சமி நிலங்களை மீட்டு, உரியவர்களுக்கு வழங்க வேண்டும் என்று போராடிய காளியாதேவியின் உயிரிழப்பில் சதி இருக்கிறது. ஆட்சி, அதிகாரத்தில் பங்குஎன்று விசிகவினர் சுவரொட்டிஒட்டியிருப்பது, ஜனநாயகப்பூர்வமான கோரிக்கை. அதிகாரத்தை ஜனநாயகப்படுத்துவது எங்கள் நிலைப்பாடு. திமுக கூட்டணியில் இருந்து கொண்டுதான் இதை வலியுறுத்துகிறோம். நடிகர் விஜய் அரசியல் பிரவேசம், பெரியார் அரசியலுக்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளது. `ஒரே நாடு, ஒரே தேர்தல்' நிலைப்பாட்டில் எங்களுக்கு உடன்பாடில்லை

x