போதை பொருள் கடத்தலை தடுப்பதில் முதல்வர் ஸ்டாலின் கடமை தவறிவிட்டார்: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு


ராமநாதபுரம்: போதைப் பொருள் கடத்தலை தடுப்பதில் முதல்வர் ஸ்டாலின் கடமை தவறிவிட்டார் என்று பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.

ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோயில் தெருவில் பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா, வீடு வீடாகச் சென்றுஉறுப்பினர் சேர்க்கையை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துவிட்டது.உளவுத் துறை அறிக்கையின்படி 850 காவல் துறை அதிகாரிகள்போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக உள்ளதாகக் கூறப்படுகிறது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், கடமை தவறிவிட்டார். அவர் பதவி விலக வேண்டும்.

திருச்சியில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் மகன்பாலியல் தொல்லை அளித்துள்ளார். தமிழகத்தில் 1,300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன. இவற்றைக் கண்டுகொள்ளாத அமைச்சர் அன்பில்மகேஸ், பள்ளியில் ஒருவர் ஆன்மிகச் சொற்பொழிவாற்றியதை பெரிதுபடுத்தி வருகிறார்.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை என்னிடம் நேருக்கு நேர் உரையாடத் தகுதியற்றவர். ராகுல் காந்தி குறித்து நான் பேசிய கருத்திலிருந்து பின்வாங்க மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்

x