துணை முதல்வர் ஆகிறேனா? - உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பதில்!


சென்னை: துணை முதலமைச்சர் பதவி குறித்து எந்த முடிவாக இருந்தாலும் முதல்வர்தான் எடுப்பார் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாகத்தான் இருக்கிறோம்.துணை முதலமைச்சர் பதவி குறித்து எந்த முடிவாக இருந்தாலும் முதல்வர்தான் எடுப்பார். முழுக்க முழுக்க அது முதல்வரின் முடிவு தான்.

என்னை துணை முதல்வராக்க வேண்டும் என தொண்டர்கள் சொல்வது அவர்களின் விருப்பம். தொண்டர்களின் விருப்பத்தை நேற்று தெரிவிக்கும் வகையில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசியிருந்தார்” என்று கூறியுள்ளார்.

x