[X] Close

உத்தரவை மீறி சில பள்ளிகள் திறப்பு!- சென்னை ஆட்சியர் எச்சரிக்கை


if-anything-happens-to-any-child-due-to-rains-or-related-incidents-necessary-action-will-be-taken

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Oct, 2018 09:49 am
  • அ+ அ-

சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் மழை விடுமுறை விடச் சொல்லியும்கூட சில பள்ளிகள் இயங்கிவரும் நிலையில் அசம்பாவிதங்கள் நேர்ந்தால் நடவடிக்கை பாயும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று மாலையில் இருந்தே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலையில் இருந்து மழை இன்னும் பெய்து வருவதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று 5ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஒரு சில பள்ளிகள் வழக்கம்போல் இயங்குவதாக தகவல் வந்ததையடுத்து சென்னை மாவட்ட ஆட்சியர், "இன்று மழைக்காக விடுமுறை விடப்பட்டும்கூட சில பள்ளிகள் இயங்குவதாக தகவல் வந்துள்ளது. மழை காரணமாக ஏதாவது ஒரு குழந்தைக்கு அசம்பாவிதம் நேர்ந்தாலும்கூட சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் மீது நடவடிக்கை எடுக்கப்படடும்" என எச்சரித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close