[X] Close

திடீர் புகார்!- திருப்பரங்குன்றம் தேர்தலுக்கான டிடிவி ஸ்ட்ராட்டஜியா?


ttv-dinakarans-strategy

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Oct, 2018 09:30 am
  • அ+ அ-

ஓபிஎஸ் மீதான திடீர் புகாரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான டிடிவியின் ஸ்ட்ராட்டஜி என அரசியல் நோக்கர்கள் சிலர் கூறுகின்றனர்.

அதிமுக தனி அரசியல் அமமுக தனி அரசியல் என்று சென்றுகொண்டிருந்த வேளையில் திடீரென ஓபிஎஸ் தன்னை சந்தித்தாக தனது ஆதரவாளர் மூலம் கொளுத்திப் போட்டிருக்கிறார் டிடிவி தினகரன்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அதிமுகவினர் தொகுதி முழுவதும் சின்னங்கள் வரைவது, பூத் கமிட்டி அமைப்பது, நிர்வாகிகளுக்கு பண விநியோகம் செய்து தேர்தல் வியூகங்களை வேகமாக அமைத்து வருகின்றனர். அமமுகவினர் திருப்பரங்குன் றத்தில் டிடிவி. தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். ஆனால், திமுக, பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகள் பெரிய அளவில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக வேகமும், ஆர்வமும் காட்டவில்லை.

ஒரு கட்சியின் குறிப்பிட்ட தொகுதிக்கான இடைத்தேர்தல் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு முதல்வரே நேரில் பங்கேற்பது இதுவே முதல்முறை. உளவுத் துறை தகவல்களும்கூட அதிமுகவுக்கு சாதகமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்தான், டிடிவி தினகரனின் ஆதரவாளர் தங்கத் தமிழ்ச் செல்வன் ஓபிஎஸ் மீது பரபரப்பு புகார் ஒன்றைக் கூறியுள்ளார். கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியானது. அதில் அவர் ஏதோ குடிப்பது போன்றும் டிவி பார்த்துக் கொண்டிருப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அப்போதும் அந்த வீடியோவை டிடிவி-யின் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார். ஆர்.கே.நகரைக் கைப்பற்ற இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

இந்நிலையில், அதிமுக-வின் கை அதன் கோட்டையான திருப்பரங்குன்றத்தில் ஓங்கியிருக்க அதை குலைப்பதற்காகவே ஓபிஎஸ் சந்திப்பு குறித்து புகாரை தனது ஆதரவாளர் மூலம் டிடிவி கூறியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close