[X] Close

அது கடந்த காலம்!- தங்கத் தமிழ்ச் செல்வன் புகாருக்கு ஓபிஎஸ் சொன்ன பதில்


ops-on-thanga-tamil-selvans-report

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Oct, 2018 09:20 am
  • அ+ அ-

தங்கத் தமிழ்ச் செல்வன் கூறிய புகாருக்கு விளக்கமாக பதில் சொல்லாமல் ஒரு வரியில் பேசிச் சென்றிருக்கிறார் துணை முதல்வர் ஓபிஎஸ்.

ஜூலை 12 2017 அன்று டிடிவி தினகரனை ஓபிஎஸ் நேரில் சந்தித்துப் பேசியதாக தங்க தமிழ்ச் செல்வன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தினகரன் ஆதரவாளரான அவர் கூறியுள்ள இந்த பரபரப்பு குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து செய்தியாளர்கள் ஓபிஎஸ்-ஸிடம் கேள்வி எழுப்ப, "நான் அந்தப் பேட்டியை முழுமையாகப் பார்க்கவில்லை. அதைப் படித்துவிட்டு பதில் சொல்கிறேன் சென்னை வாருங்கள். அது கடந்த காலம்.." எனக் கூறிச் சென்றார்.
சென்னை கோட்டூர்புரத்தில் ஒரு பில்டர் வீட்டில் இந்த சந்திப்பு நடந்ததாகவும் கடந்த வாரம் கூட மீண்டும் டிடிவியை சந்திக்க நேரம் கேட்டதாகவும் ஓபிஎஸ் மீது தங்கத் தமிழ்ச் செல்வன் புகார் கூறியிருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close