வாட்ஸ்-அப் செயலியில் அசத்தலான அப்டேட்... பயனர்கள் மகிழ்ச்சி!


வாட்ஸ் அப் செயலியில் அவ்வப்போது புதுப்புது அம்சங்களை கொண்டு வந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது மெட்டா நிறுவனம். அந்த வகையில் புது அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது பயனர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயனாளர்களின் எண்ணிக்கை 5 பில்லியனை கடந்து சென்று வருகிறது. அந்த அளவுக்கு ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள மிகவும் எளிய முறையில் இந்த செயலி இருப்பதால், பயனாளர்கள் மத்தியில் வாட்ஸ் - அப் செயலிக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் மெட்டா நிறுவனம் வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்காகவும், வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவும் கூடுதல் அம்சங்களை வாட்ஸ் அப்பில் அவ்வப்போது அறிமுகம் செய்து பயனாளர்களை திருப்திபடுத்துகிறது.

அதன்படி, வாஸ்ட் ஆப்பில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதில், தனிப்பட்ட சாட்களை போன்று சேனலிலும் வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது மெட்டா நிறுவனம். மேலும், சேனல்களில் பகிரப்படும் புகைப்படங்களை பயனர்கள் தங்களின் ஸ்டேட்டஸில் நேரடியாக பதிவிடும் அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அண்மையில், ஒருவர் வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும்போது பயனர் ப்ளே செய்யும் ஆடியோவை எதிர்முனையில் இருப்பவர் கேட்கும்படி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

x