[X] Close

விஜய் நூறு வயசு வாழணும்; சிகரெட், மது காட்சி வேணாமே! அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்


vijay-anbumani

சர்கார் விஜய் - அன்புமணி ராமதாஸ்

  • வி.ராம்ஜி
  • Posted: 04 Oct, 2018 19:54 pm
  • அ+ அ-

 

நடிகர் விஜய் நூறாண்டுகள் வாழவேண்டும். சிகரெட் குடிப்பது போலவோ மது அருந்துவது போலவோ நடிக்காதீர்கள் விஜய் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் விஜய் குறித்து தெரிவித்ததாவது.

சினிமாவில் வேண்டுமானால் நடிப்பேன். முதலமைச்சராக வந்தால், நடிக்கமாட்டேன் என்று நடிகர் விஜய் பேசியிருக்கிறார். விஜய்க்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். முதலில் விஜய், தான் நடிக்கும் படங்களில், சிகரெட் பிடிப்பதை நிறுத்தட்டும். மது அருந்துவது போல் நடிக்காமல் இருக்கட்டும். ஒரு லீடர், ஒரு தலைவர் என்பவர், அனைவராலும் பின்பற்றப்படுபவராக இருக்கவேண்டும்.

நடிகர் விஜய்க்கே இது ஆரோக்கியக் குறைவாகிவிடும். சிகரெட் குடித்தால், மது அருந்தினால் கேன்ஸர் வரும், இன்னும் பல நோய்கள் வரும் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். நடிகர் விஜய் நூறாண்டுகள் வாழவேண்டும். நானும் விஜய் படங்களையெல்லாம் பார்க்கிறவன் தான். எங்கள் குடும்பத்தார் கூட விஜய்யின் படங்களை விரும்பிப் பார்க்கிறார்கள். அவர், சிகரெட் குடிக்கிற காட்சிகளை, மது அருந்துகிற காட்சிகளை இனி நடிக்காமல் இருக்கட்டும்.

நடிகர் விஜய் என்றில்லை. எல்லா நடிகர்களும் இப்படியான காட்சிகளில் நடிக்கக்கூடாது. இந்தியாவில் மதுவிற்பனையில் முதலிடம் வகிப்பது தமிழகம்தான். அதேபோல, இந்தியாவில் சிகரெட் அதிகம் விற்பனையாகிற மாநிலமும் தமிழகம்தான். நடிகர்கள் படத்துக்காக ஸ்டைலாக இதையெல்லாம் செய்வதைப் பார்த்துவிட்டு, இளைஞர்கள் அதில் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

எனவே நடிகர் விஜய், முதலில் சிகரெட், மது விஷயங்களை தன் படங்களில் இருந்து நீக்கட்டும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close