ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், சித்தேபள்ளி கிராமத்தில் விஜயநகர காலம், மற்றும் டெல்லி சுல்தான்கள் ஆட்சிக் காலத்தைய தங்கக் காசுகள் அடங்கிய புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே சித்தேபள்ளி கிராமத்தில் அங்காளம்மா கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள மலையில் பாறாங்கல் ஒன்றின் அடியில் நேற்று தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டது.
இதில் 450க்கும் மேற்பட்ட தங்கக் காசுகள் இருந்தன. ஆந்திர அரசிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த தங்க காசுகள் குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்திய தொல்லியல் துறை இயக்குநர் கே. முனிரத்தினம் ரெட்டி இந்த காசுகளை ஆய்வு செய்தார்.
அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த புதையலில் 15 ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜய் மன்னரின் காசுகளும், 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த டெல்லி சுல்தான் காலத்துக் காசுகளும் உள்ளன. இந்த தங்க நாணயங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஏற்பாடு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.