மதுரை : திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்! திரண்ட நிர்வாகிகள், தொண்டர்கள்!


மதுரையில் நீட் தேர்வுக்கு எதிராக இன்று திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.

அதிமுக எழுச்சி மாநாடு கடந்த 20-ம் தேதி மதுரையில் நடைபெற்றது. அதே நாளில் தமிழகம் முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநரை கண்டித்தும் திமுக சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. ஆனால், மதுரையில் அதிமுக மாநாடு நடக்கும் அன்றே திமுக உண்ணாவிரதமும் நடக்கவிருந்த நிலையில், திடீரென ஆகஸ்ட் 23ம் தேதிக்கு உண்ணாவிரதம் மாற்றப்பட்டது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினையைத் தவிர்க்க கட்சித் தலைமை அறிவுறுத்தலின் பேரில், இந்த மாற்றம் நடந்துள்ளதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

பின்னர் மீண்டும் இந்த உண்ணாவிரத போராட்டத்தின் தேதி ஆகஸ்ட் 24ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி, மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கோ.தளபதி, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

x