[X] Close

’விஜய் தன்னை எம்ஜிஆராக நினைத்துக் கொள்கிறார்’ - விளாசிய ஆர்.பி. உதயகுமார்


sarkar-audio-launch

  • kamadenu
  • Posted: 03 Oct, 2018 14:21 pm
  • அ+ அ-

சென்னையில் ’சர்கார்’ இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பிரசன்னா தொகுத்து வழங்கினார். அப்போது, “நிஜத்தில் முதலமைச்சரானால் என்ன செய்வீர்கள்” என்ற கேள்வியை எழுப்பும் போது “நிஜத்தில் முதலமைச்சரானால் முதலமைச்சராக நடிக்க மாட்டேன். உண்மையாக இருப்பேன் என்பதையே சொல்ல வருகிறேன்” என்று பதிலளித்தார் விஜய்.

இதன் மூலம் விஜய்க்கும் அரசியல் ஆசை இருப்பது உறுதியாகியுள்ளது என்று பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்தக் கருத்துக்கு பல்வேறு அரசியல்வாதிகளும் தங்களுடைய கருத்துகளைத் கூறிவருகிறார்கள்.

இந்நிலையில் விஜய்யின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "நடிகர் விஜய் அரசியலில் குதிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார். முடியவில்லை. அவருக்கு தைரியமிருந்தால் குதிக்கட்டும். அடிபடாமல் தப்பித்துக் கொள்வது அவரது சாமர்த்தியம். 

பாவம் அரசியலை பற்றி அவருக்கு தெரியவில்லை. தன்னை எம்.ஜி.ஆராக நினைத்துக் கொள்கிறார். இந்த நாட்டில் எம்ஜிஆருக்கு இணையாக எவரும் கிடையாது. சினிமாவில் நடிப்பது உங்கள் வேலை. அந்த வேலையை நீங்கள் சரியாக பாருங்கள். நாட்டை நாங்கள்தான் சரியாக பார்த்துக் கொண்டிருக்கிறோமே. 

மக்கள் உங்களிடம் வந்து அரசியலுக்கு வரச் சொன்னார்களா? படத்தில் முதல்வராக வேடம் போடலாம். மக்கள் அதை ரசிப்பார்கள். ஆனால் முதல்வராக செயல்படுவது என்பது சாதாரண காரியம் இல்லை. நாங்கள் மக்களுக்காக என்னென்ன திட்டங்களை நிறைவேற்றினோம் என்பது ரஜினிக்கோ கமலுக்கோ விஜய்க்கோ தெரியாது. ஏனென்றால் அவர்களெல்லாம் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.” என்று கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close