[X] Close

விளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணம்: அரசுப் பள்ளி ஆசிரியருக்கு தேசிய விருது 


india-government-award-for-villupuram-teacher

தேசிய விருது பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் திலீப்ராஜாவை பாராட்டுகிறார் பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன்.

  • kamadenu
  • Posted: 02 Oct, 2018 09:44 am
  • அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர், தனது மாணவர்களுக்கு விளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணம் கற்பிக்கும் முறையை புகுத்தியதற்காக தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் கற்பிக்கும் முறையில் மாணவர்களிடையே புதுமையை புகுத்தும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கு தேசிய அளவில் நடந்த தேர்வில் நாடு முழுவதும் இருந்து பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என 240 பேர் தங்களின் கற்பிக்கும் முறையை சமர்ப்பித்தனர். இறுதி சுற்றில் 17 மாநிலங்களைச் சேர்ந்த 28 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களிடம் கற்பிக்கும் முறை குறித்த அறிக்கையை பெற்றனர். இவர்களில் 25 பேர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டனர். அதில், தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள், இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி ஆங்கில ஆசிரியர் திலீப் ராஜா விளையாட்டு முறையில் ஆங்கில இலக்கணத்தை கற்பித்தலுக்கான விருதை பெற்றார். கடந்த வாரம் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. விருது பெற்றதையொட்டி திலீப் ராஜாவுக்கு மாவட்ட கல்வி அலுவலகத்தில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

"ஆங்கில இலக்கணத்தை வகுப்பறையில் வெறுமனே சொல்லித் தரும்போது மாணவர் கள் கவனம் செலுத்துவதில்லை. அதையே விளையாட்டுப் போக்கில் சொல்லித் தர தொடங்கினேன். உதாரணத்துக்கு, வினைச் சொல் மற்றும் பெயர்ச் சொல்லை எளிய வேடிக்கையான விளக்கங்களுடன் வகுப்பறை மற்றும் மைதானத்தில் வைத்து சொல்லித் தருகிறேன்" என்று கூறுகிறார் தேசிய விருது பெற்ற திலீப் ராஜா.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close