[X] Close

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா மாவட்டங்கள் போர்க்களமாக மாறும்: முத்தரசன் எச்சரிக்கை


mutharasan-speech-about-hydrocarbon-issue

  • kamadenu
  • Posted: 02 Oct, 2018 09:41 am
  • அ+ அ-

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா மாவட்டங்கள் போர்க்களமாக மாறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் விவசாய தொழிலைச் சார்ந்த தொழிலாளிகள் ஒரு கோடி பேரும், நாட்டில் 22 கோடி பேரும் உள்ளனர். இவர்கள் எல்லோருமே நிலமற்ற கூலி தொழிலாளர்கள். நூறு நாள் வேலை திட்டத்தை நிறுத்த முடியாது என்பதால் பாஜக அரசு அதற்கான நிதியை படிப்படியாக குறைத்து வருகிறது. நகர்புற மக்கள் பயனடையும் வகையில் நூறு நாள் வேலையை விரிவுபடுத்த வேண்டும்.

அரசு மருத்துவமனையில் தனியார் பாதி அரசு பாதி என்ற திட்டம் மத்திய, மாநில அரசுகளின் முன்மொழிவில் உள்ளது. ஆறுகள் இணைப்பு திட்டம் கிடப்பில் உள்ளது.

ஆந்திராவில் 33 கி.மீட்டர் பாயும் பாலாற்றில் 22 தடுப்பணைகளை மத்திய, மாநில அரசுகளின் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளன.

மக்கள் ஏற்காத வரை ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார். ஆனால் பணியை துவக்க ஒப்பந்தம் கோருகிறார்கள்.

இது டெல்டா பகுதியை பாலைவனமாக மாற்றும். இது மத்திய அரசின் மூர்க்கத்தனமான செயல். இதனால் டெல்டா மாவட்டங்கள் போர்க்களமாக மாறும். மத்திய, மாநில அரசுகள் ஜனநாயக குரலுக்கு மதிப்பதில்லை. மாறாக அடக்குமுறைகளை கையாள்கிறது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை எல்லா கட்சிகளையும் அழைத்து பொது விழாவாக நடத்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரசு பணத்தில் அதிமுக விழாவாக நடத்தி நாகரிகம் இல்லாமல் எதிர்கட்சிகளை வசைபாடினர். இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரை பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா ஆகியோருடன் ஒப்பிட்டது கண்டனத்துக்குரியது என்றார். மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன், பொருளாளர் கலியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.மக்கள் ஏற்காத வரை ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த கூடாது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close