தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 685 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்டப்போவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 685 ஓட்டுநர் உடன் நடத்துநர்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இன்று மதியம் 1 மணி முதல் வருகிற 18.9.2023 மதியம் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு. ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன் தேர்வு (Practical) மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.