[X] Close

இன்னும் 1000 வழக்குகளை சந்திப்பதற்கு தயார்: கருணாஸ்


karunas-speech-after-released-from-vellore-prison

  • kamadenu
  • Posted: 29 Sep, 2018 10:31 am
  • அ+ அ-

இன்னும் 1000 வழக்குகளை சந்திப்பதற்கு தயார் என்று வேலூர் சிறையிலிருந்து விடுதலையானவுடன் கருணாஸ் தெரிவித்தார்.


முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரியை அவதூறாகப் பேசியதாக கருணாஸ் மீது பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் செப்.23-ம் தேதி கருணாஸ் கைது செய்யப்பட்டு முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு அங்கிருந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கருணாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து கருணாஸ் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே ஐபிஎல் போட்டியின் போது சட்டவிரோதமாக போராட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 2 வழக்குகளை கருணாஸ் மீது போலீஸார் பதிவு செய்தார்கள். இதில் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.  பிறகு அவர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். 

இவ்விரண்டு வழக்கிலுமே கருணாஸுக்கு ஜாமீன் கிடைத்தது. முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கில் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் காலை 8:30 மணிக்கும், ஐபிஎல் போட்டி வழக்கில் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் காலை 10:30 மணிக்கும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து வேலூர் சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். 

அப்போது செய்தியாளர்கள் மத்தியில் கருணாஸ் பேசியதாவது:

பொய் வழக்குகளை புனைந்த ஒரு அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அனைத்து அதிகாரிகளிடமும் புகார் கொடுத்தோம். சம்பந்தப்பட்ட அதிகாரியை விசாரிக்காமல், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், ஒட்டுமொத்த அதிகாரிகளும் ஒன்றாக சேர்ந்து என் மீது பொய் வழக்குகளை புனைவதைத்தான் மக்கள் வியப்பாக பார்க்கிறார்கள்.

எனக்காக குரல் கொடுத்தவர்களுக்கும், என்னை பழிவாங்க வேண்டும் என்று ஆவலோடு இருந்தவர்களுக்கும், என் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த உயிர்களுக்கும், உறவுகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில், எந்த நிலை வந்தாலும் தன்னிலை மாறாது இந்த முக்குலத்தோர் சமுதாயத்திற்காகவும், முக்குலத்தோர் புலிகளின் மானமும், வீரமும் சேர்ந்து இந்த மண்ணிலே வாழ்வதற்காகவும் இன்னும் 1000 வழக்குகளை சந்திப்பதற்கு இந்த கருணாஸ் தேவர் தயார் என்று தெரிவித்துக் கொள்கிறேன் 

இவ்வாறு கருணாஸ் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close