இபிஎஸ் ஆடிய நாடகம் மக்களுக்குத் தெரியாதா?: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!


உதயநிதி ஸ்டாலின்

நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் தொடங்கும் போதே எடப்பாடியாருக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால், அவர் அதனைப் பொருட்படுத்தாமல் நாம் நாடகம் ஆடுகிறோம் என்கிறார். யார் நாடகம் ஆடுகிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

உதயநிதி ஸ்டாலின்

ஈரோடு வடக்கு தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘’ இதுவரை நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற வேண்டுமென 25 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம். விரைவில் பல லட்சம் பேரிடம் வாங்க உள்ளோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதே நமது ஒற்றை இலக்காக இருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்

அரியலூர் மாணவி அனிதா இருந்திருந்தால் அவர் மருத்துவராகி இருப்பார். இந்த நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் தொடங்கும் போதே எடப்பாடியாருக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால், அவர் அதனைப் பொருட்படுத்தாமல் நாம் நாடகம் ஆடுகிறோம் என்கிறார். யார் நாடகம் ஆடுகிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.

இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானவரா? இவர் ஆடிய நாடகங்கள் என்ன என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். மக்களவைத் தேர்தலில் இவர்களை மக்கள் ஓட ஓட துரத்தும் போது புரியும்’’ என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

ப்பா... கிளாமரில் தெறிக்க விட்ட தமன்னா

x