மனதின் குரல் நிகழ்ச்சியில் தான் பேசும்போது இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்றும் மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியில் வானொலி, தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
இதில் நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி, எதிர்காலம் குறித்து பிரதமர் பேசுகிறார். இதை பல்லாயிரக் கணக்கானோர் கேட்கின்றனர். தமிழகத்தின் தொன்மை, பெருமை, சாதனைத் தமிழர்கள் குறித்தும் கூட இதில் மோடி பேசியிருக்கிறார்.
அதன்படி எதிர்வரும் 26-ம் தேதி ஞாயிறன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச உள்ளார். அன்றைய தினம் தனது உரையில் இடம்பெற வேண்டிய கருத்துக்கள் குறித்து மை கவர்ன்மென்ட், நமோ செயலி, 1800-11-7800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று மோடி அழைப்பு விடுத்துள்ளார்.