[X] Close

கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்துவிட முடியாது- முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு 


ex-minister-raja-kannapan-pechu

ராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார் முன்னாள் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன்

  • kamadenu
  • Posted: 27 Sep, 2018 12:11 pm
  • அ+ அ-

ராமநாதபுரம்

அரசியல் கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்துவிட முடியாது என ராமநாதபுரத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பேசினார்.

ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரும், ராமநாதபுரம் எம்பியுமான அ.அன்வர்ராஜா, முன்னாள் அமைச்சர் டாக்டர்.எஸ்.சுந்தரராஜ், மாவட்ட அவைத் தலைவர் செ.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் பேசியது: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரோ விடுதலை செய்யக்கூடாது என்கிறார். கருத்து முரண்பாடுகள் உள்ள இருவரும் கூட்டணி வைத்திருப்பதாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

ஜெயலலிதா இருக்கும் வரை கட்சியிலோ, ஆட்சியிலோ டிடிவி தினகரன் வரவில்லை. நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார், காணாமல் போய் விட்டார். தற்போது ரஜினியும், கமலும் அரசியலுக்கு வருவதாக கூறுகின்றனர். கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்துவிட முடியாது என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close