[X] Close

கூடங்குளம் போராட்ட வழக்கில் கைதானவர் - ஓராண்டுக்கு பின் முகிலன் விடுதலை


mukilan-released-after-1-year

  • kamadenu
  • Posted: 27 Sep, 2018 12:07 pm
  • அ+ அ-

மதுரை 

கூடங்குளம் வழக்கில் கைதான முகிலன் ஓராண்டுக்கு பின், நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் சென்னி மலையைச் சேர்ந்தவர் முகிலன். பொதுப்பணித்துறையில் பொறியாளராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், கூடங்குளம் பாதுகாப்பு இயக்கம், ஜல்லிக்கட்டு உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது தேசத்துரோக வழக்கு உட்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

தூத்துக்குடியில் ஸ்டெர் லைட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்.18-ல் நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். போராட்டம் முடிந் தபின், கூடங்குளத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பான 13 வழக்குகளில் இவரை போலீஸார் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

பின்னர் ஜூலை 1 முதல் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப் பட்டார். சிறையில் இருந்தபோது இவர் மீது கரூர் போலீஸார் தேசத்துரோக வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாதது உட்பட 4 வழக்குகளிலும் கைது செய்தனர். இந்நிலையில், 17 வழக்குகளிலும் ஜாமீன் கோரி முகிலனின் வழக்கறிஞர் சரவ ணன் நீதிமன்றங்களில் மனு செய்தார். அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்தது. இதைத் தொடர்ந்து 374 நாட்களுக்குப் (ஓராண்டு, ஒரு வாரம்) பிறகு நேற்று மதுரை மத்திய சிறையில் இருந்து முகிலன் விடுதலை செய்யப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளான பேரறி வாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி மக்கள் இயக்கம் நடத்து வேன்.

புழல் சிறைக்குள் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது எப்படி? அதிகாரிகளின் அனுமதியின்றி சிறைக்குள் செல்போன் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் எப்படி போக முடியும். அதிகாரிகளுக்கு தெரிந்தே இது நடக்கிறது.

சிறை வளாகத்திற்குள் கைதிகள் சித்ரவதைக்கு ஆளாகின்றனர். உயரதிகாரிகளும் இதைக் கண்டுகொள்வதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close