[X] Close

அடுத்தடுத்த கொலைகளால் சுற்றுலா பயணிகள் அச்சம் - ‘மர்மதேசமாக’ மாறும் மலைகளின் இளவரசி


kodaikanal-murders

கொடைக்கானல் பாம்பார்புரம் வனப்பகுதியில் கொலை செய்து வீசப்பட்ட உடலை தேடும் பணியில் ஈடுபட்ட போலீஸார். (கோப்பு படம்)

  • kamadenu
  • Posted: 27 Sep, 2018 12:04 pm
  • அ+ அ-

பி.டி.ரவிச்சந்திரன்

கொடைக்கானல்

சுற்றுலாத்தலமான கொடைக்கானல், சமீப காலமாக கொலைத்தலமாக மாறி வருவதைக் கட்டுப்படுத்த போலீஸார் சிரத்தை எடுத்து செயல்பட வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க் கின்றனர்.

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல், சுற்றுலாப் பயணிகளை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி மர்ம தேசமாக மாறி வருகிறது. இதற்கு கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நடக்கும் சமூக விரோதச் செயல்கள், சுற்றுலாப் பயணிகள் போர்வையில் வந்து மலைப்பகுதியில் அரங்கேற்றப் படும் கொலைகள்தான்.

இரு மாதங்களாக கொடைக் கானல் மலைப்பகுதியில் அடுத்தடுத்து கொலைகள் நடந்து வருகின்றன. இதனால் கொடைக்கானல் மீண்டும் கொலைக்களமாகிறதா என்ற அச்சம் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளிடமும் ஏற்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் நடந்த கொலைகள் அனைத்துக்கும் காரணம் முறையற்ற தொடர்புகள்.சென்னை துணை நடிகை விஷ்ணுப்பிரியாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கார் ஓட்டுநர் பிரபாகரனுடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து அறிந்த அவரது தந்தை, கார் ஓட்டுநரை கூலிப்படையை ஏவிக் கொன்று ஆயிரம் அடி பள்ளத்தில் உடலை வீசிய சம்பவம் நடந்தது.

இதையடுத்து மதுரையை சேர்ந்த நண்பகள் கொடைக்கான லுக்கு சுற்றுலா வந்தபோது உடன் வந்த நண்பர் மணிகண்டனை கொலை செய்து பாம்பார்புரம் அருகே வீசி விட்டுச் சென்றனர்.

நண்பரின் மனைவியுடன் மணிகண்டன் தொடர்பு வைத் திருந்ததே கொலைக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்தது.

உடலை ஆயிரம் அடிக்கு கீழ் உள்ள பள்ளத்தில் கொலையாளிகள் வீசிவிட்டு செல்ல, இதனை மீட்க போலீஸார், தீயணைப்புத் துறையினர் படாதபாடு படவேண்டிய நிலை ஏற்படுகிறது.

சில தினங்களுக்கு முன் துபாயில் பணிபுரிந்த முகமதுசமீர், மனைவி மற்றும் குழந்தையுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். மலைச் சாலையில் பயணித்தபோது, கார் ஓட்டுநருடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்தார். இதற்கும் முறையற்ற தொடர்புதான் காரணம்.கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவதுபோல் வந்து கொலை செய்துவிட்டு உடலை வீசி சென்றால் யாருக்கும் தெரியாது; என்ற எண்ணத்தில் பலரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சுற்றுலா நகரம் என்பதைத் தக்க வைக்க போலீஸார் கூடுதல் சிரத்தை எடுத்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு இதுபோன்ற கொலைகளைத் தடுக்க வேண்டும் என்பதுதான் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள் ளது.

ஓமனா முதல் சமீர் வரை

கொடைக்கானல் கொலைகளில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தவர் வெளிமாநிலப் பெண் ஓமானாதான். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தனது கணவரை கொன்று துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து மலையில் வீச காரில் வந்தார். துர்நாற்றம் வீசியதால் கார் ஓட்டுநர் மூலம் சிக்கிக்கொண்டார்.

இந்தச் சம்பவம் கொடைக்கானலை கொலைக்களமாக வெளியுலகிற்கு காட்டியது.

பிரபல ஓட்டல் அதிபரை சிக்கவைத்த கொலையும் கொடைக்கானலில் நடந்ததுதான். அடையாளம் தெரியாத உடல் என்று முதலில் போலீஸாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின் கொலை வழக்காக மாற்றப்பட்டு விஸ்வரூபம் எடுத்து தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

திருவாரூரிலிருந்து கொடைக்கானலுக்கு வாடகை காரில் வந்த நபர்கள், அந்த கார் ஓட்டுனரை மலைப்பகுதியில் கொன்று வீசி காரை கடத்திச்சென்ற சம்பவமும் நடந்தது.

மதுரையைச் சேர்ந்த ரியஸ்எஸ்டேட் அதிபர் ஒருவர் கொடைக்கானல் மலைப்பகுதியில் கொன்று வீசப்பட்டார்.

இப்படி கொடைக்கானலுக்கு வெளிநபர்களை அழைத்து வந்து கொலை செய்து வீசும் சம்பவங்களின் பட்டியல் நீள்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close