[X] Close

அரசு சார் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு அரசியல், நிர்வாக தலைமைகளே காரணம்: ஆளுநர் கிரண்பேடி குற்றச்சாட்டு


kiran-bedi

  • kamadenu
  • Posted: 27 Sep, 2018 11:51 am
  • அ+ அ-

புதுச்சேரி

புதுச்சேரி கூட்டுறவு சங்கங்கள், அரசு சார்பு நிறுவனங்களில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதற்கு அப்போதைய அரசியல் தலைமையும், நிர்வாக தலைமையும் காரணம் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளு நர் கிரண்பேடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் கூட்டுறவு சங்கங்கள், அரசு சார்பு நிறுவனங்க ளில் நிதியுதவி அளிப்பதில் அதிக கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளோம். அதிகாரிகள் சொல்வதை கேட்கும்போது நிதியுதவி அளிப்பதில் கவனம் செலுத்தாமல் செய்துள்ளோம் என்பது தெரிகிறது. பல ஆண்டுகளாக இவ்விஷயத்தில் நிதியை பரிசீலனை இல்லாமல் தந்துள்ளனர். இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கொல்லைப்புறம் வழியாக அதிகளவில் ஆட்கள் நியமனம் தொடங்கி ஊதியத்துக்கே அதிக நிதி செலவிடுவதை ஆடிட்டர் சுட்டிக்காட்டியதை கவனத்தில் கொள்ளவில்லை. குறிப்பிட்ட பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி பெரும்பாலும் ஊதியத்துக்கே மாற்றப்பட்டுள்ளன.

தொழில் ஒப்புதல் இல்லாமல் செயல்பட்டதால் பொதுத்துறை நிறுவனம், கூட்டுறவு சங்கம் ஆகியவற்றில் அடிப்படை திறன் இல்லாமல் போய்விட்டனர். பெரும் நஷ்டம் ஏற்பட்டதற்கு அப்போதைய அரசியல் தலைமையும், நிர்வாக தலைமையும் காரணம்.

கடன் சுமை அதிகரித்து அதை திருப்பிக் கட்ட முடியாமலும் ஊழியர்களுக்கு ஊதியம் தர முடியாத நிலைமையும் ஏற்பட்டுள் ளது. நிதி கோரினால் அதை ஆய்வு செய்து கேள்விகள் முதலில் கேட்கப் படும். அதன் பின்னரே பரிசீலனை செய்யப்படும். செயல்பாட்டினை பார்த்தே நிதி தரப்படும். தற்போது ஒரு முனையில்தான் இதை பார்க்கிறோம். கண்ணுக்கு தெரியாமல் பல விஷயங்கள் உள்ளதை ராஜ்நிவாஸ் ஆராயும். நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்க ளில் பணிமதிப்பீடு செய்யப்படும்.

பொதுமக்களின் பணமே இவர்களுக்கு நிதியாக தரப்படுகிறது. அதில் மக்களுக்கு பயனும் கிடைக்க வேண்டும். துறைகளின் செயலர், துறை தலைமை கருத்துகளை தெரிவிக்க வேண்டும். நிதியை மாற்றம் செய்யவோ, கொல்லைப்புறமாக ஆட்களை நியமிக்கவோ கூடாது. நிதி மேலாண்மை பொறுத்துதான் அனைத்தும் இருக்கிறது.அதிகாரிகள் தலைமை பொறுப்பு ஏற்று நடக்கவேண்டும்.

பணியை மீறி செயல்பட்டோர் ஓய்வு பெற்றாலும் அவர்களின் கோப்புகள் அவர்களை தொடரும். இச்செயல்பாடு முன்பே தொடங்கிவிட்டது.நிதி உதவி தொடர்பான பட்டியல் செயல்பாடு விவரங்களை முதல் பட்டியலை சம்பந்தப்பட்டோருக்கு அனுப்பி யுள்ளோம்.

இது எச்சரிக்கை என்பது மட்டுமில்லாமல் அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்து கிறோம்.ஓய்வூதியம் தேவை யென்றால் சரியில்லாதவற்றையும், தவறையும் தடுத்து நிறுத்துங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.இதை தான் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அனுப்பியிருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close