[X] Close

உங்கள் எஜமானரை எதிர்க்க தைரியம் இருக்கிறதா?- அதிமுகவை குத்திக்காட்டிய ஸ்டாலின்


stalin-questions-admk

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Sep, 2018 16:49 pm
  • அ+ அ-

ராஜபக்சேவை அண்மையில் டெல்லிக்கு அழைத்து வந்து பிரதமரைச் சந்திக்க வைத்ததே உங்கள் எஜமானர் கட்சி தானே. அவர்களை எதிர்க்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? என அதிமுகவை தாக்கியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

இலங்கைப் போரின்போது மத்தியில் கூட்டணியாக இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரஸை தண்டிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.

"ஊழலில் கொழுத்துக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியாளர்கள் தி.மு.க வுக்கு எதிராக போராட்டம் நடத்தி நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார்கள்! ராஜபக்சேவை அண்மையில் டெல்லிக்கு அழைத்து வந்து பிரதமரைச் சந்திக்க வைத்ததே உங்கள் எஜமானர் கட்சி தானே. அவர்களை எதிர்க்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா?" என ஸ்டாலின் ட்வீட் செய்திருக்கிறார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் மறைமுகமாக பாஜக ஆட்சி நடைபெற்று வருவதாக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் விமரித்து வருகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அமைச்சர்கள் தங்கள் பதவிகளை தக்க வைத்துக்கொள்வதற்காக பாஜகவுக்கு தலையாட்டி பொம்மைகளாக இருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக என்று பொதுக்கூட்டம் நடத்தும் அதிமுகவை குத்திக்காட்டும் வகையில் ஸ்டாலின் ட்வீட் செய்திருக்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close