திமுக எங்கு போட்டியிட சொன்னாலும் தயாராக உள்ளோம்... தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் பேட்டி!


வேல்முருகன்

மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரும்படி திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், தேர்தல் பணியை திமுக முடுக்கிவிட்டுள்ளது. அத்துடன் தனது கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. இதுவரையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விசிக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடான பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை.

வேல்முருகன் - ஸ்டாலின்

இந்நிலையில், திமுகவுடன் முதல்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று கலந்துக் கொண்டார். பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "கடந்த மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றியில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு நானும் பங்காற்றியுள்ளேன். வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஒரு தொகுதியை அளிப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் சட்டமன்றத்தை போல நாடாளுமன்றத்திலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் குரல் ஒலிக்க வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு

தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கட்டமைப்பு உள்ளது. அதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில், எந்த தொகுதியில் போட்டியிடவும் நாங்கள் தயார். பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சாதிவாதி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற வரலாற்று மிக்க அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். இதுகுறித்து பேச்சுவார்த்தை குழுவிடம் வலியுறுத்தியுள்ளேன். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக தெரிவித்தனர்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

x