திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் போலீஸாருக்கு பேரிடர் மீட்புப் பணி சிறப்புப் பயிற்சி 


திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக் குளத்தில் போலீஸாருக்கு பேரிடர் மீட்பு பணி சிறப்பு பயிற்சி இன்று காலை நடைபெற்றது.

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக் குளத்தில் இன்று காலையில் போலீஸாருக்கு பேரிடர் மீட்புப் பணி சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையையொட்டி பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக போலீஸாருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், டிஜிபி-யான சங்கர் ஜிவால், ஐஜி-யான ஜெயஸ்ரீ உத்தரவின் பேரில், காவல் அதிவிரைவுப் படை பயிற்சி பள்ளி எஸ்பி-யான பிரபாகரன், திருவள்ளூர் எஸ்பி-யான சீனிவாசபெருமாள் மேற்பார்வையில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறையின் கீழ் உள்ள ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சட்டம் - ஒழுங்கு காவலர்களுக்கு பேரிடர் மீட்புப் பணி சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதில், பேரிடர் காலத்தில் வெள்ள நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது எப்படி? கட்டிட இடிபாடுகள், மின் விபத்து உள்ளிட்டவற்றில் சிக்கியவர்களை மீட்பது எப்படி என பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், இன்று காலை திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில், படகுகளை எவ்வாறு இயக்குவது, வெள்ள நீரில் மூழ்கியவர்களை மீட்பது எப்படி உள்ளிட்டவை குறித்து சென்னை காவல் அதிவிரைவுப் படை பயிற்சி பள்ளி உதவி ஆய்வாளர் பழனி மற்றும் தலைமை காவலர்கள் பயிற்சி அளித்தனர்.

x