கூட்டணியை நம்பி வண்டி ஓட்டும் திமுக... அண்ணாமலை ஆவேசம்!


தூத்துக்குடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

திமுக கூட்டணியை நம்பி வண்டி ஓட்டி வருவதாகவும், ஏதாவது ஒரு தேர்தலில் தனியாக நின்று இருக்கிறார்களா எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், விமானம் மூலம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை திரும்பினார். முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”சீனாவிற்கு ஆதரவாக கனிமொழி எம்.பி பேசுவது கண்டனத்திற்குரியது. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது 12 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் தான் செய்தது. இந்தியாவின் முதல் ராக்கெட் செலுத்தும் மையம் முதலில் தமிழ்நாட்டிற்கு தான் வந்தது. ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அல்ல.” என்றார்.

தூத்துக்குடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

மேலும், “1967 முதல் 1969-ம் ஆண்டு காலக்கட்டத்தின் போது அண்ணாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அந்த திட்டம் கிடைக்கவில்லை. அப்போதைய அமைச்சர் மதியழகன் மதுபோதையில் சதீஷ் தவானை சந்திக்கச் சென்றுள்ளார். இதனால் இத்திட்டம் கைவிட்டு போனதாக, நம்பி நாராயணன் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் பாதுகாப்பு பிரச்சினையின்றி அதனை செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு மத்திய அரசு குலசேகரப்பட்டினத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.” என்றார்.

தூத்துக்குடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், ”பாரதிய ஜனதா கட்சி கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளது. தென் தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எந்த கட்சிகளுக்கும் வெற்றி கிடைக்காது. பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே வெற்றி கிடைக்கும். திமுக, கூட்டணியை நம்பி வண்டி ஓட்டி வருகிறது. ஏதாவது ஒரு தேர்தலில் இதுவரை தனியாக நின்று இருக்கிறார்களா? திமுக வீர வசனம் மட்டுமே பேசி வருகிறது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

x