ஸ்டாலினுக்கு உதயநிதியை முதல்வராக்க வேண்டும்... அமித் ஷா விமர்சனம்!


அமித்ஷா

சோனியா காந்திக்கு ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டும், ஸ்டாலினுக்கு உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கிறது. இவர்களுக்கு இந்தியாவைப் பற்றியெல்லாம் கவலை இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ’என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை உலகளவில் தலைநிமிரச் செய்துள்ளார். இங்கு இருக்கக் கூடிய சாதியவாதம், குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல், ஊழல் உள்ளிட்டவைகளுக்கு முடிவுக்கட்டி வருகிறார்.

பல்லாயிரம் கோடி ஊழல் செய்து நாட்டை சுரண்டிக் கொள்ளையடித்தவர்கள், இன்றைக்கு ’இந்தியா’ என ஒன்றுக் கூடியுள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இருப்பது நாட்டை வளர்க்க அல்ல, இவர்களின் குடும்பங்களை வளர்க்க.

சோனியா காந்திக்கு ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும். முதல்வர் மு.கஸ்டாலினுக்கு உதயநிதியை முதல்வர் ஆக்க வேண்டும். லாலு பிரசாத் யாதவிற்கு தேஜஸ்வி யாதவையும், மம்தா பானர்ஜிக்கு அவருடைய மருமகனை முதல்வராக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. மகராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரேவுக்கு அவருடைய மகனை முதல்வர் ஆக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. 2024 ல் மோடி மீண்டும் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

x