கே.எஸ்.அழகிரிக்கு என்னாச்சு! தலை, கால்முட்டியில் கட்டுடன் வெளியான புகைப்படம்!


கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நடைப்பயிற்சியின் போது தவறி விழுந்து காயமடைந்ததாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கீரப்பாளையத்தில் உள்ள வீட்டில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது கே.எஸ்.அழகிரி தவறி விழுந்ததாகவும், இதில் அவரது நெற்றி, கால் முட்டி ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் ஓய்வெடுத்து வருவதாகவும், இதனால் தமிழ்நாடு காங்கிரஸின் முன்னாள் தலைவர் இளையபெருமாளின் நூற்றாண்டு தொடக்க விழாவில், அவர் பங்கேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x