5 ஆண்டுகளில் 13 கோடி இந்தியர்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம் - பிரதமர் மோடி பெருமிதம்!


பிரதமர் மோடி

கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 13 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்'' என ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி பேசினார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் அருங்காட்சியகம் மற்றும் பிர்சா முண்டா நினைவு அருங்காட்சியகத்தை மோடி பார்வையிட்டார். இதையடுத்து பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், 15வது தவணைத் தொகை 2000 ரூபாய் இன்று வரவு வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 15வது தவணை தொகையை வெளியிட்டார்.

இதையடுத்து, குந்தி மாவட்டத்தில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்றைய நாள் நல்ல அதிர்ஷ்டம் நிறைந்த நாளாகும். பிர்சா முண்டா நினைவுப் பூங்கா மற்றும் சுதந்திரப் போராளிகள் அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் வாய்ப்பும் கிடைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. பழங்குடியினரின் பெருமை தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழை மக்கள் ஆகியவை நாட்டின் 4 தூண்கள்.

பிரதமர் மோடி

இந்த நான்கு தூண்களும் வளர்ச்சி அடையும் போது நாடு வளர்ச்சி அடையும். இன்று நாம் ஜார்க்கண்ட் நிறுவன தினத்தை கொண்டாடுகிறோம். இது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முயற்சியால் தான் நடந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 13 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு ரூ.50,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் பரிசாக கிடைத்துள்ளது. விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் 13,000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. ரூ. 15 ஆயிரம் கோடி வரை கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று பேசினார்.

பிரதமர் மோடி

மேலும், சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பது பாஜ.,வின் முன்னுரிமை. இது தான் எங்கள் இலக்கு.21ம் நூற்றாண்டில் மத்திய பிரதேசத்தை வளர்ச்சி அடைந்ததாக மாற்ற பாஜகவால் தான் முடியும். காங்கிரசின் வாரிசு அரசியல், எதிர்மறை சிந்தனையால் ம.பி மக்கள் கோபத்தில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

x