விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, இன்று பாஜகவில் இணைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப் பேரவை உறுப்பினரான விஜயதரணி, டெல்லியில் பாஜக பொதுச்செயலாளர் அருண் சிங், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.
கடந்த ஒருவாரமாகவே இவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவரை காங்கிரஸ் தலைமை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் விஜயதரணி இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். விஜயதாரணி விளவங்கோடு தொகுதியில் கடந்த 2011 முதல் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் பிரமுகர்கள் விலகி, பாஜகவில் இணைந்து வருவது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இச்சூழலில் தற்போது விஜயதரணியின் விலகல் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...